Sunday, 19 November 2017

என்ன கொடுமைடா இது....!!!! டிஎன்பிஎஸ்சி தேர்வை வெளி மாநிலத்தவரும் எழுதலாமா!!!!!

சென்னை:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.இதற்காக ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற வெறியோடு எழுதி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அந்த புது விதியில் வெளிமாநிலத்தவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதலாம் என்றும் வெற்றி பெறும் வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவர்க்கு போட்டித் தேர்வுகளில் எந்த காரணத்திற்காக அனுமதி அளித்தது என்று ஒரே குழப்பமாக உள்ளது.                            அரசின் இந்த அறிவிப்பு மாநில இடஒதுக்கீட்டிற்கே கேடு விளைவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.. வேலைவாய்ப்புக்காக தமிழக இளைஞர்களே காத்திருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற கேள்விக்கு விடை கல்வி நிபுணர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, 18 November 2017

என்ன கொடுமைடா இது....!!!! டிஎன்பிஎஸ்சி தேர்வை வெளி மாநிலத்தவரும் எழுதலாமா!!!!!


சென்னை:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.இதற்காக ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற வெறியோடு எழுதி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அந்த புது விதியில் வெளிமாநிலத்தவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதலாம் என்றும் வெற்றி பெறும் வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவர்க்கு போட்டித் தேர்வுகளில் எந்த காரணத்திற்காக அனுமதி அளித்தது என்று ஒரே குழப்பமாக உள்ளது.அரசின் இந்த அறிவிப்பு மாநில இடஒதுக்கீட்டிற்கே கேடு விளைவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.. வேலைவாய்ப்புக்காக தமிழக இளைஞர்களே காத்திருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற கேள்விக்கு விடை கல்வி நிபுணர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Miss world india 2017

இந்தியா 17 வருடங்களுக்கு அடுத்தாக Miss worldல் வெற்றி கிரிடத்தை அடைந்துள்ளது. The new miss world was manusha chhillar.
                                                           இவரின் வயது 20 . பிரியங்கா சோப்ராவிற்கு அடுத்த Miss world இவரே.                                                                      Manusha chhillar ஹரியானாவை சேர்ந்தவர் தற்போது மருத்துக்கல்லூரியில் படித்து வருகிறார்.

வருது.. வருது.. புதுசா 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள்.. அடுத்த வாரம் வங்கக்கடலில் உருவாகிறது!

வருது.. வருது.. புதுசா 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள்.. அடுத்த வாரம் வங்கக்கடலில் உருவாகிறது!

டெல்லி: வங்கக்கடலில் அடுத்த வாரம் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் இதுவரை வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவானது. முதலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சுமார் 10 நாட்கள் மழை பெய்தது.

குறிப்பாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்ததால் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை ஓய்ந்தது.

கடலில் பெய்த மழை

பின்னர் 3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. ஆனால் இதனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் பெரும்பாலான மழை கடலிலேயே பெய்தது.

தமிழகத்தில் மழை இல்லை

பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடதிசையில் நகர்ந்து ஒடிஷா நோக்கி சென்று விட்டது. இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைந்து தற்போது மழை முற்றிலும் நின்றுவிட்டது.

2 புதிய காற்றழுத்த தாழ்வுகள்

இந்நிலையில் வங்க கடலில் அடுத்த வாரம் புதிதாக 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை சராசரியை விட குறைந்த அளவே பெய்துள்ளதால் கலக்கமடைந்த மக்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியளித்துள்ளது.

இந்திய வானிலை மையம் தகவல்

வரும் 21ம் தேதி அந்தமான் அருகேயும், தென்கிழக்கு வங்க கடலில் வரும் 27ம் தேதியும் அடுத்தடுத்து 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத்தை பொறுத்தவரை பெரும்பாலும் அது தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

இருப்பினும் காற்றின் சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

Friday, 17 November 2017

ABOUT CHENNAI .....!!!!! நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி  தகவல்

கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பிற்காலத்தில் தண்ணீரால் மூழ்கப் போகும் நகரம் பற்றி  நாசா வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது 

கடலில் இருக்கும் மலை போன்ற ராட்சத ஐஸ் மலைகள் உருகி வருவது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி நடப்பதில்லை என்பது நமக்கு தெரிந்த ஒன்றே..

அவ்வாறு கடல்நீர்மட்டம் உயர்ந்துவிட்டால்,அண்டார்டிகா, க்ரீன்லேண்ட், மங்களூர் ஆகிய பகுதிகளில் கடல் மட்டம் அதிகளவில் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது 

 

மும்பையை பொருதவரை 1.526 மி.மீ., 
அண்டார்டிகா, க்ரீன்லேண்ட், மங்களூர் 1.598 மி.மீட்டராக நீர்மட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

 

 

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும் போது,இவ்வாறு கடல் நீர்மட்டம் உயர்ந்தால் அதிகளவில் எந்தெந்த  நகரம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய கிரேடியன்ட் பிங்கர் பிரின்ட் மேப்பிங் என்ற புதிய கருவி ஒன்றை நாசா கண்டுபிடித்துள்ளது.

இந்த கருவி மூலம் சுமார் 293 முக்கிய நகரங்களில் மேற்கொண்ட ஆய்வு மூலம் எந்த நகரம் அதிகம் பாதிக்கப்படும் என அறியப்பட்டு உள்ளது. 

பாதிக்கப்படும் இடங்கள் 

க்ரீன்லேண்டின் (வடக்கு, கிழக்கு பகுதி ஐஸ் மலை) - நியூயார்க் பாதிக்கப்படும். 
கிரீன்லேண்டின் (வடமேற்கு பகுதி ஐஸ் மலை) -லண்டன் பாதிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

க்ரீன்லேண்ட் மற்றும் அண்டார்டிகாவில் ஐஸ் மலைகள் - தெற்கு ஆசியாவில் உள்ள சிட்டாகாங், கொழும்பு, கராச்சி ஆகிய நகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுமாம்.
நாசாவின் இந்த தகவலால், மங்களூர் மும்பை மற்றும் வெளிநாடுகளில் கணிக்கப்பட்ட சில இடங்களில் மக்கள் சற்று பதற்றம் அடைந்து உள்ளனர் 

 குறிப்பு : மங்களூர்  மூழ்கும்  என  தெரிவித்த  நாசா சென்னை  பற்றி  எந்த  தகவலும் தெரிவிக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது 

Naai kadi itha nee padi (நாய் கடித்ததில் கல்லூரி விரிவுரையாளர் பலி)

திருச்சி அருகே நாய் கடித்ததில் கல்லூரி விரிவுரையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே நாய் கடித்ததில் கல்லூரி விரிவுரையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த செவலூர் திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் குகன்ராஜ்(வயது 29). இவர் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற நாய் குகன்ராஜை கடித்தது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் வழக்கமாக கல்லூரிக்கு சென்று தன் பணியை தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குகன்ராஜூக்கு காய்ச்சல் ஏற்படவே, மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு கல்லூரிக்கு சென்று விட்டார்.

கல்லூரியில் இருந்த குகன்ராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே கல்லூரியில் உள்ளவர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு குகன்ராஜ் யாரையும் அருகில் வரவிடாமல் திடீரென ஆக்ரோ‌ஷமாக காணப்பட்டார். அவரை கட்டுப்படுத்த முடியாத அளவில் அவரின் ஆக்ரோ‌ஷம் இருந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் குகன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்ததால் ஏற்பட்ட பாதிப்பில் குகன்ராஜ் இறந்ததால் மருத்துவமனையில் இருந்து அவரின் உடலை கொடுக்கப்படவில்லை. அவரது உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

இருப்பினும் இறந்தவரின் உடல் அருகில் யாரையும் மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு குகன்ராஜின் உடலை மருத்துவமனை பணியாளர்களே எடுத்துச் சென்று தகனம் செய்தனர். மேலும் நாய் கடித்ததால் குகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது.

மணப்பாறை செவலூர் பகுதியில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரியும் நிலையில் பலரும் இதுபோன்று நாய்க்கடிக்கு ஆளாக வேண்டிய நிலை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் குகன்ராஜ் உயிரிழந்துள்ளார். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்காவிடில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Thursday, 16 November 2017

உலகின் மிகப் பெரிய வைரம் see detail below link

ஜெனிவா, உலகின் மிகப் பெரிய, குறைபாடுகள் இல்லாத வைரம் ரூ.219.79 கோடிக்கு ஜெனிவாவில் நடந்த ஏலத்தில் விற்பனையானது.

ஆப்பிரிக்காவின் அங்கோலா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரமே உலகத்தின் மிகப் பெரிய வைரம் என்று கூறப்படுகிறது. வெட்டியெடுக்கப்படுவதற்கு முன்பு இது 404 காரட்டுகளைக் கொண்டிருந்தது. வடிவமைப்புக்குப் பிறகு இந்த முதல் தர வைரம் வெள்ளை நிறத்தில் தீப்பெட்டியின் அளவு மற்றும் வடிவத்தில் உள்ளது. சுமார் 7 செ.மீ. (2.7 அங்குலம்) நீளம் கொண்ட இந்த வைரம் 163 காரட்டுகள் கொண்டது.

ஜெனிவாவில் உள்ள கிறிஸ்டி என்னும் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. முன்னதாக இந்த வைரம் ரூ.193.7 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைவிட அதிகமாக ரூ.219.79 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது