Thursday, 29 December 2016

இந்திய கிரிக்கெட் 2016: களம் ஆளும் கோலி-கும்ப்ளே கூட்டணி

2016- இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறந்த ஆண்டு. வீரர்கள் அனைவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த, டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
ஐசிசி பவுலிங் தரவரிசையிலும், ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடம் வகித்தார். மேலும், பவுலிங் தரவரிசையில் அஸ்வின், ஜடேஜா இருவரும் முதல் இரண்டு இடங்களை முதல் முறையாகப் பிடித்தனர்.
கோலி கேப்டனாக வீரராக பல சாதனைகளை நிகழ்த்திய ஆண்டாக 2016 அமைந்தது. உலக அளவில் இந்திய அணியை பெரிய டெஸ்ட் அணியாக வீழ்த்த முடியாத டெஸ்ட் அணியாக மாற்றமடையச் செய்ய கோலி - கும்ப்ளே கூட்டணி அடித்தளம் அமைத்த ஓர் ஆண்டாக 2016 அமைகிறது.
2007-ம் ஆண்டு டி20 உலக சாம்பியன்களான இந்திய அணி, அதன் பிறகு டி20 வடிவத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஒயிட்வாஷ் கொடுத்து மீண்டும் இழந்த புகழை நிலைநாட்டியது.
தோனியின் தலைமையில் உலகக் கோப்பை டி20 தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக தோற்று இந்தியா வெளியேறியது. கோப்பையை மே.இ.தீவுகள் வென்றது.

No comments:

Post a Comment