தென்கொரிய நிறுவனம் ஒன்று, புதுவிதமான ரோபோவை உருவாக்கி, முதற்கட்ட சோதனையை முடித்திருக்கிறது. ஹாலிவுட்டின், அவதார் படத்தில், இறுதிக் காட்சியில், வில்லன் பயன்படுத்தும் ரோபோவைப் போலவே இருக்கும், இந்த ரோபோவின் தோற்றத்தை வடிவமைத்ததும், ஒரு ஹாலிவுட்காரர் தான். பிரபல தந்திரக்காட்சி வடிவமைப்பாளர், விடாலே பல்காரோவ் வடிவமைக்க உதவிய, அந்த ரோபோவின் உயரம், 13 அடி, எடை, 1.3 டன். பாதுகாப்பில்லாமல், மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் கூட, வேலை செய்வதற்கு உதவும் என்கிறது, இதை வடிவமைத்த, 'ஹான்குக் மிரே' என்ற நிறுவனம். வழக்கமாக, ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான், மூளையாக செயல்படும். இத்தொழில் நுட்பத்தை உருவாக்குவது சிரமம் என்பதால், மூளைத் திறனை விடுத்து, மிதமிஞ்சிய பலத்தை மட்டும் பயன்படுத்தும் விதத்தில், இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்போ, மூளை? அவதார் படத்தில் வருவது போல, ரோபோவுக்கு உள்ளேயே, ஒரு மனிதர் உட்கார்ந்து இயக்குவார்! அந்த ரோபோவுக்கு உள்ளிருப்பவர், அதன் கை, கால்களை, நினைத்தபடி இயக்கத் தேவையான கட்டுப்பாட்டு அமைப்புகள், அதற்குள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இப்போதைக்கு, 'மெக்' என, அழைக்கப்படும் இந்த ரோபோவுக்கு, தேவையான மின்சாரம், மின் கம்பிகள் மூலமே வழங்கப்படுகிறது. எனவே, தொழிற்சாலைகளில், கனமான பொருட்களை கையாளவும், வெப்பம், குளிர் போன்ற ஆபத்தான சூழல்களில், மனிதர்கள் வேலை செய்யவும், மெக் உதவும்
No comments:
Post a Comment