Saturday, 18 November 2017

என்ன கொடுமைடா இது....!!!! டிஎன்பிஎஸ்சி தேர்வை வெளி மாநிலத்தவரும் எழுதலாமா!!!!!


சென்னை:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.இதற்காக ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற வெறியோடு எழுதி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அந்த புது விதியில் வெளிமாநிலத்தவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதலாம் என்றும் வெற்றி பெறும் வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவர்க்கு போட்டித் தேர்வுகளில் எந்த காரணத்திற்காக அனுமதி அளித்தது என்று ஒரே குழப்பமாக உள்ளது.அரசின் இந்த அறிவிப்பு மாநில இடஒதுக்கீட்டிற்கே கேடு விளைவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.. வேலைவாய்ப்புக்காக தமிழக இளைஞர்களே காத்திருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற கேள்விக்கு விடை கல்வி நிபுணர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment