Sunday, 8 January 2017

சூரிய ஒளி மின் பலகைகளை சாலையில் பதித்து சாதனை


சூரிய ஒளி மின் பலகைகளை சாலையில் பதித்து சாதனை புரிந்திருக்கிறது பிரான்ஸ் அரசு. நார்மாண்டி பகுதியில், நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில், 1 கி.மீ., தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சாலையில், 2,800 ஒளி மின் பலகைகள் பதிக்கப்பட்டுள்ளன. 'வாட்வே' என்ற நிறுவனம், அரசு உதவியுடன் செய்திருக்கும் இந்த முயற்சி, ஒரு பரிசோதனைதான். என்றாலும், சாலையில் சூரிய மின் பலகைகளை பதித்த முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் தட்டிச் சென்றுள்ளது. ஆண்டிற்கு, 280 மெகாவாட் அளவுக்கு இந்த சாலை மின்சாரத்தை உற்பத்தி செய்யும். 35.54 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் பரிசோதனை இரண்டு ஆண்டிற்கு நடக்கும். பிறகு மெல்ல, மெல்ல பிற சாலைகளிலும் இதேபோல் சூரிய மின் பலகைகளை பதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment