Monday, 26 December 2016

டிச.,30-க்கு பிறகு ரூ.10,000 மேல் பழைய ரூ.500, 1000 வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம்: மத்திய அரசு புதிய திட்டம்

டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பழைய ரூ. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு அவரச சட்டம் கொண்டுவர உள்ளது. பழைய ரூ.500 மற்றும் 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டு 49 நாட்கள் ஆன பின்னரும் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு நீட்டித்து வருகிறது. இதனால் பல்வேறு தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பணப்பிரச்சனையை நீக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்ச் மாதம் வரை தட்டுபாடு நீடிக்கும் என்றும் இதனால் வங்கிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்றும் வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். 
இந்நிலையில் பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள கடைசி நாளான டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு அவற்றை மக்கள் வைத்திருக்க கட்டுபாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் குறைந்தப்பட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் அல்லது வைத்திருக்கும் தொகையின் ஐந்து மடங்கு அபராதமாக விதிக்கப்படும் என்றும் இதற்காக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 
வரும் மார்ச் வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென டிசம்பர் 30 ம் தேதிக்கு பிறகு அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடனுக்கான டிசம்பர் மாத தவணைகளில் திருப்பி செலுத்த 60 நாட்கள் கூடுதலாக  அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவி்த்துள்ளது. முறையாக கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டியில் கூடுதலாக 3 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment