Thursday, 29 December 2016

உங்களுக்கு எது தேவை? முடிவு செய்யும் ஃபேஸ்புக்!

மோடி 500,1000 ரூபாய தடை பண்ணா,விராட் கோலி செஞ்சுரி அடிச்சா, புதுசா விஜய் பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆனா உடனே நம்ம ஃபேஸ்புக் டைம்லைன்ல தெரியுதே எப்படினு என்னிக்காவது யோசிச்சிருக்கீங்களா? ஃபேஸ்புக் உங்க டைம்லைன வைச்சு மிகப்பெரிய வேலைய பாத்துக்கிட்டு இருக்கு. இதுல வியாபாரம், மக்களை இணைப்பதுனு பல விஷயங்களை தெறிக்க விடுவது தான் மார்க் உத்தி....
ஃபேஸ்புக் டைம்லைன்ல முன்னாடியெல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ் போடுற ஸ்டேட்டஸ், சம்பந்தமே இல்லாம ஒரு நியூஸ் இது தான் டைம்லைன்ல இருக்கும். இதையெல்லாம் மாத்த ஃபேஸ்புக் புதிய உத்தியை கையில் எடுத்தது. அதுனால தான் இன்னிக்கு எந்த செய்தியையும் நம்ம டைம்லைன்ல மிஸ் பண்ணாம பார்க்க முடியுது. இந்த ஐடியா எப்படி வந்ததுனு சமீபத்துல ஒரு பேட்டில பதில் சொன்ன மார்க் ''உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்த செய்தியை அவர் பதிவிட்டு இருக்கிறார்'' அந்த செய்தியை ஐந்து மணி நேரம் கழித்து ஃபேஸ்புக்கிற்குள் நுழைந்த என்னால் பார்க்க முடியவில்லை. பல செய்திகள் அதனை முந்தி சென்று விட்டன. அப்போது தான் டைம்லைனில் சில முக்கியமான விஷயங்களை அறிமுகம் செய்ய விரும்பினோம் என்றார்
உங்களோட நட்பு வட்டாரத்துல இருக்குற நண்பர்கள் யாரோட பதிவு வந்தாலும் அது உங்களுக்கு முதல்ல தெரியுற மாதிரி ''See First'' ஆப்ஷனா தேர்ந்தெடுத்து வைச்சுக்கலாம்.  அதுமட்டுல்லாம சில ஃபேவரைட் பக்கங்கள நம்மளோட நோட்டிஃபிகேஷன் வர்ற மாதிரி செட் செஞ்சு வைச்சுக்கலாம். ஆனா இது எல்லாமே ஒருவரோட விருப்பத்தின் அடிப்படைல  இருக்கறது இத தாண்டி தான் ஃபேஸ்புக் ஒவ்வொருத்தரோட டைம்லைனையும் வடிவமைக்குது. 
நியூஸ் ஃபீடில் வரும் செய்திகள் அதனை லைக் செய்பவர்கள், கமெண்ட் செய்பவர்கள், ஷேர் செய்பவர்கள் இவற்றின் அளவை பொருத்து அதன் ரீச் இருக்கும். அதிக பேர் விரும்பும் செய்திகளை உங்கள் டைம்லைனில் முக்கியமான செய்தியாகவும், வேறு ஒரு தளத்தில் உங்கள் நண்பரால் லைக், கமெண்ட் செய்யப்பட்ட செய்திக்கு முக்கியத்துவம் அளித்தும் டைம்லைனை வடிவமைக்கிறது.
அதன் பின்பு ஒருவரது தேடுதல் பேட்டர்னை வைத்து நிர்ணயிக்கிறது. அதாவது ஒருவர் உணவு தொடர்பான பக்கங்களை அதிகமாக தேடுகிறார் என்றால் அவருக்கு அது தொடர்பான செய்திகளை முன்னிலை படுத்தி காட்டுவது. ஒருவர் சினிமா தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்றால் அவரது விருப்ப பக்கங்கள் சினிமா தொடர்பாக பகிரும் செய்திகள் அவருக்கு முதலில் வருவது போன்றும் டைம்லைனை வடிவமைக்கிறது ஃபேஸ்புக். 

ஃபேஸ்புக் தனது நியூஸ் ஃபீடில் பதியப்படும் நம்பகத்தன்மையற்ற பதிவுகளை அதிகப்பேருக்கு டைம்லைனில் காட்டமலும், சில மோசமான பதிவுகளை நீக்கியும் தனது டைம்லைனின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. மிகவும் பழைய செய்திகளை நண்பர்கள் விரும்பும் போது அதனை நீண்ட நேரம் டைம்லைன் ஃபீடில் அனுமதிகாமல் இருப்பதிலும் உயிர்ப்புத்தன்மை குறையாமல் பார்த்து கொள்கிறது ஃபேஸ்புக்.

ஒருவரது விருப்பம் என்பதை தாண்டி அவர் எந்த மாதிரியான பதிவை விரும்புகிறார் ஆடியோ, வீடியோ, இணையதள லின்க்குகள் என அவர் விரும்பும் பதிவை விரும்பும் வடிவத்திலும் தருகிறது ஃபேஸ்புக். ஒருவேளை நீங்கள் ஒரு வீடியோ விரும்பியாக இருந்தால் உங்கள் டைம்லைனில் பெரும்பாலான பதிவுகளை வீடியோவாக தர ஃபேஸ்புக் முயற்சிக்கும். நீங்கள் பயன்படுத்தும் டேட்டா மீது அதிக கவனம் செலுத்துபவராக இருந்தால் அதிமகாக ''ஃபேஸ்புக்கின் இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள்'' களை படிப்பவராக இருந்தால் அந்த பதிவுகளை அவருக்கு அதிகமாக வழங்குகிறது ஃபேஸ்புக்.
இப்படி ஒவ்வோரு நொடியும், ஒவ்வோரு நபருக்கு தகுந்தவாறு ஃபேஸ்புக் டைம்லைனை மாற்றியமைக்கிறது ஃபேஸ்புக்.  2 பில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்த சமூக வலைதளம் ஒவ்வோரு நொடியும் டைம்லைனை அனைவருக்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கிறது என்றால் அதன் அல்காரிதம் எழுதப்பட்டுள்ளது. அனைத்து செய்திகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் நபருக்கு ஏற்றவாறு வழங்கும் ஃபேஸ்புக் விளம்பரங்களையும் இடம், விருப்பம், தேடல் அடிப்படையில் வழங்குகிறது.
உலகில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இணைய சேவைகளில் ஃபேஸ்புக்கும் ஒன்று. சில சறுக்கல்கள் இருந்தாலும் டைம்லைனை கில்லியாக வைத்திருக்க ஃபேஸ்புக் நிறைய மெனக்கெடுகிறது. அதனால் நிறைய வருமானமும் ஈட்டுகிறது. ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ், ஃபேஸ்புக் லைவ், புகைப்படங்களுக்கான புதிய டூல், மக்களின் ரீயாக் ஷன் என டம்லைன் வடிவமைப்பில் பெரிய உத்தியுடன் களமிறங்கும் ஃபேஸ்புக் விரைவில் அனைத்து இணையதளங்களுக்கும் மாற்றான ஒற்றை இணையதளமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

ஒருவருக்கு இரண்டு ஆதார் அட்டை கிடைத்துள்ளது

ஒரு ஆதார் அட்டை பெறுவதற்கு சிரமங்கள் இருக்கும் நிலையில், ஒருவருக்கு இரண்டு ஆதார் அட்டை கிடைத்துள்ளது. இந்த வினோத சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.
மத்திய, மாநில அரசின் சலுகைகள் மற்றும் மானியங்களைப் பெற ஆதார் எண் முக்கியம். தமிழகத்தில் ஏராளமானோர் இன்னும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காமல் இருக்கின்றனர். ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தும் இதுவரை கிடைக்காதவர்களும் இருக்கின்றனர். இதனிடையே, ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு மேலும் 2 மாதங்கள் நீட்டித்துள்ளது. மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டாச்சியர் அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஒரே நபருக்கு வெவ்வேறு பதிவு எண்களில் இரண்டு ஆதார் அடையாள அட்டை இருக்கிறது. புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி (85) என்பவருக்குதான் இரண்டு ஆதார் அட்டை வந்துள்ளது. முதலில் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளார் சக்கரவர்த்தி. ஆறு மாதங்கள் ஆகியும் ஆதார் அட்டை வரவில்லை. இதனால் மீண்டும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். ஒரு மாதம் கழித்து இவருக்கு வெவ்வேறு பதிவு எண்களோடு இரண்டு ஆதார் அட்டைகள் கிடைத்துள்ளன

ஆதார் எண் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் போன்றவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள்

தமிழகத்தில் இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள், ஆதார் அட்டைக்கு பதிவுசெய்துவிட்டு ஆதார் எண் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் போன்றவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளன. இன்று முதல் 301 இடங்களில் 2 மாதங்களுக்கு இந்த முகாம்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சேவையைப் பெற ஏதுவாக, ஆதார் உதவி மையங்களை தமிழகத்தின் அனைத்து 285 வட்டாட்சியர் அலுவலகங்கள் , சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள்  மற்றும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் என மொத்தம் 301 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன



 

2017 indian team nerupuda


2016-ல் இந்திய கிரிக்கெட் ஒரு கண்ணோட்டம்


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்தியா ஆஸ்திரேலியாவில் 1-4 என்று இழந்த நிலையில், 2016 மோசமாகவே தொடங்கியது. இந்தத் தொடரில் கடைசி போட்டி சிட்னியில் ஆஸ்திரேலியாவின் 325 ரன்களுக்கும் மேலான இலக்கை மணீஷ் பாண்டே அனாயச சதத்தின் மூலம் துரத்தி வெற்றிகண்ட போட்டியாக அமைந்தது. எனவே ஆண்டுத் தொடக்கத்தில் மணீஷ் பாண்டே என்ற ஒரு அபார வீரரை இந்தியாவுக்கு அடையாளம் காட்டிய போட்டி சிட்னி ஒருநாள் போட்டியாகும்.
ஆனால், டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-ம் நிலை அணியை களமிறக்கினாலும், அதன் மண்ணில் முதன்முறையாக டி20 தொடரில் 3-0 என்று இந்தியா ஒயிட்வாஷ் கொடுத்தது.
பிறகு நாடு திரும்பிய இந்தியா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியை படுமோசமாகத் தோற்றாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றிய கையோடு வங்கதேசத்தில் ஆசியக் கோப்பைக்குச் சென்றது. முதல் முறையாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 வடிவத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேசத்தை முதலில் வீழ்த்திய இந்திய அணி, பாகிஸ்தானையும் வீழ்த்தி, இலங்கை, யு.ஏ.இ. அணிகளையும் பந்தாடியது.
மழையால் பாதிக்கப்பட்ட இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை வென்று உலகக் கோப்பை டி20 நமக்குத்தான் என்ற ஆவலை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. இதற்கும் மேலாக தோனி மீண்டும் நமக்கு ஒரு கோப்பையை வென்று தருவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடையே நிலவியது குறிப்பிடத்தக்கது.
2016 உலகக் கோப்பை டி20:
2007-ல் டி20 உலக சாம்பியன்களான பிறகு அணியில் பல மாற்றங்கள் ஏற்பட அடுத்தடுத்த உலகக் கோப்பை டி20-களில் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக டி20 உலகக் கோப்பை நடைபெற்றது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பையும் நாடித்துடிப்பையும் அதிகரித்தது.
ஆனால் ரசிகர்களின் அதிர்ச்சியடையுமாறு உலகக் கோப்பை முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோனி படை அதிர்ச்சித் தோல்வி கண்டது. பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்க தடுமாற்றத்திற்குப் பிறகு விராட் கோலியின் உறுதியினால் வெற்றி பெற்றது, பிறகு வங்கதேசத்திற்கு எதிராக நெருக்கமான, பரபரப்பான போட்டியிலும் இந்தியா வென்றது. வெற்றி பெற்றேயாக வேண்டுமென்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தான் யாரென்று நிரூபித்தார். பெரிய அளவுக்கு காட்டுத்தனமாக ஆடாமலேயே அதிக ரன் விகித விரட்டலையும் வெற்றியாக சாதிக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல கிரிக்கெட் உலகிற்கே நிரூபித்தார் விராட் கோலி.
கஷ்டப்பட்டு அரையிறுதியில் நுழைந்து மே.இ.தீவுகளை சந்திக்க அன்று மே.இ.தீவுகளின் ஆட்டம் வேறு ஒரு மட்டத்தில் இருந்ததால் இந்தியா தோல்வியடைந்து வெளியேற மீண்டுமொரு முறை டி20 உலகக் கோப்பை கை நழுவியது.
உலகக் கோப்பை டி20 தோல்வியினால் அதனையடுத்த ஐபிஎல் டி20 போட்டிகளும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் டி20 பேட்டிங்கை வேறொரு மட்டத்துக்கு உயர்த்திய விராட் கோலி மீதான எதிர்பார்ப்புகள் கூடின. கோலியும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விதம் சாதனைக்குரியது. இந்த ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் 973 ரன்களுடன் அதிக ஐபிஎல் ரன்கள் என்ற சாதனைக்குரியவரானார் விராட்.
கோலி இப்படி ஆடியும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இன்னொரு முறை தவற விட்டது. இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வி கண்டு ஏமாற்றமடைந்தது.
ஜிம்பாப்வே தொடர்:
ஐபிஎல் திருவிழாவுக்குப் பிறகு ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி ஒரு விரைவுப் பயணம் மேற்கொண்டது. இதில் முக்கிய, நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட ஜிம்பாப்வேக்கு இந்த 2-ம் நிலை இந்திய அணியே சமாளிக்க முடியாததாகி ஜிம்பாப்வே 0-3 என்று ஒயிட்வாஷ் ஆனது.
ஆனால் ஒருநாள் தொடரில் இழந்த மதிப்பை டி20 தொடரில் ஜிம்பாப்வே முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஈட்டியது. ஆனால் தொடரை வெல்லும் அளவுக்கு அந்த அணியிடம் வலுவில்லாததால் இந்திய அணி 2-1 என்று டி20 தொடரையும் வென்றது.
கோலியின் கேப்டன்சி பெருமையை நிலைநாட்டிய நீண்ட டெஸ்ட் தொடர்களின் தொடக்கம்:
ஒரே சீசனில் ஏகப்பட்ட டெஸ்ட் தொடர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் விராட் கோலி தலைமை இந்திய அணி மே.இ.தீவுகளுக்குச் சென்றது, அனில் கும்ப்ளே பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் தொடர் இது என்பது ஆவலைக்கூட்டுவதாக அமைந்தது.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஓரளவுக்கு இந்திய பிட்ச் போன்ற சூழலில் கேப்டன் விராட் கோலி தன் முதல் டெஸ்ட் இரட்டைச் சதத்தை எடுக்க இந்திய அணி மே.இ.தீவுகளை இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்த 2 போட்டிகளும் டிரா, இதில் கடைசி டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளின் ஸ்டூவர்ட் சேஸ் மிக அருமையான சதத்துடன் அஸ்வினின் தீவிர சுழலையும் மீறி டிரா செய்தது மே.இ.தீவுகள் கிரிக்கெட்டின் புதிய தொடக்கமாகவே அமைந்தது. இந்திய அணி தற்காலிகமாக டெஸ்ட் முதலிடத்தைப் பிடித்தது.
டெஸ்ட் தொடருக்குப் பிறகு கிரிக்கெட் வளர்ச்சித் திட்டம் என்பதற்கு இணங்க அமெரிக்காவின் புளோரிடாவில் தோனி படை, மே.இ.தீவுகளை 2 டி20 போட்டியில் சந்தித்தது. முதல் டி20 போட்டி இரு அணிகளுக்குமான அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. அருமையான விரட்டலில் கடைசியில் தோனியின் தவறினால் ஒரு ரன்னில் இந்தியா தோல்வி தழுவியது, இரண்டாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு நோ-ரிசல்ட் ஆனது.
பாகிஸ்தான் இடையில் தனது வெற்றியின் மூலம் டெஸ்ட் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க, இந்தியா நியூஸிலாந்து அணியை மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் முயற்சியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொண்டது.
இதில் தாறுமாறாக திரும்பும் ஸ்பின் பிட்சை இந்தியா அமைத்து நியூஸிலாந்தை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் முதலிடத்தை மீண்டும் பெற்றது. இந்தத் தொடரும் விராட் கோலி பேட்டிங் பேசியது.
இதனையடுத்த ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து தான் ஒரு சிறந்த ஒருநாள் அணி என்று நிரூபித்தது. 5 போட்டிகளில் 4 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 2-2 என்று இருந்தன. கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. இதில் ஸ்பின் எடுக்கும் பிட்சில் அமித் மிஸ்ரா 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற நியூஸிலாந்து படுதோல்வி அடைந்தது, இந்தியா தொடரை 3-2 என்று வென்றது.
அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான கடினமான டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆடுவது அவ்வளவு சுலபமல்ல. மேலும் தற்போதைய வீர்ர்கள் ஆண்டு முழுதும் எங்காவது விளையாடிக் கொண்டேயிருக்கும் நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை அதுவும் இங்கிலாந்து போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடுவது சவாலானதே.
இந்தக் கடும் சோதனையிலும் கோலி படை வெற்றி கண்டது. ராஜ்கோட்டில் நேரடியான தோல்வியை தவிர்த்து டிரா செய்து அடுத்த 4 போட்டிகளிலும் வென்றது. இதில் பிட்ச் பெரிய அளவில் உதவிபுரியவில்லை. இரு அணிகளுமே ஆடும் பிட்ச்சாகத்தான் தயாரிக்கப்பட்டது. ஆனால் அஸ்வின், ஜடேஜா, அவ்வப்போது உமேஷ் யாதவ், மொகமது ஷமியின் அபாரப்பந்து வீச்சுகளினால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 4-0 என்று இழந்தது. பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா ஆகியோருடன் அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட பின்கள வீரர்களின் பங்களிப்பும் இந்திய அணியை சரிவுக் கட்டங்களிலிருந்து மீண்டெழச் செய்துள்ளது.
 
 
 
 

இந்திய கிரிக்கெட் 2016: களம் ஆளும் கோலி-கும்ப்ளே கூட்டணி

2016- இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறந்த ஆண்டு. வீரர்கள் அனைவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த, டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
ஐசிசி பவுலிங் தரவரிசையிலும், ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடம் வகித்தார். மேலும், பவுலிங் தரவரிசையில் அஸ்வின், ஜடேஜா இருவரும் முதல் இரண்டு இடங்களை முதல் முறையாகப் பிடித்தனர்.
கோலி கேப்டனாக வீரராக பல சாதனைகளை நிகழ்த்திய ஆண்டாக 2016 அமைந்தது. உலக அளவில் இந்திய அணியை பெரிய டெஸ்ட் அணியாக வீழ்த்த முடியாத டெஸ்ட் அணியாக மாற்றமடையச் செய்ய கோலி - கும்ப்ளே கூட்டணி அடித்தளம் அமைத்த ஓர் ஆண்டாக 2016 அமைகிறது.
2007-ம் ஆண்டு டி20 உலக சாம்பியன்களான இந்திய அணி, அதன் பிறகு டி20 வடிவத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஒயிட்வாஷ் கொடுத்து மீண்டும் இழந்த புகழை நிலைநாட்டியது.
தோனியின் தலைமையில் உலகக் கோப்பை டி20 தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக தோற்று இந்தியா வெளியேறியது. கோப்பையை மே.இ.தீவுகள் வென்றது.

Tuesday, 27 December 2016

தமிழனின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்



தமிழனின் பாரம்பரியமான வீரவிளையாட்டு ஜல்லிகட்டு அதை நாம் வாழ வைக்க வேண்டும். தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.

வகைகள்
சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்




தற்காலச் சிக்கல்கள்

ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், பெடா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் இதில் அடக்கம். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது குற்றச்சாட்டு. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர்.[5][6] ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன.

வீரவிளையாட்டான ஜல்லிகட்டு இல்லையெனில் நமது நாட்டு வீரக்காளைகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். காளைகளின் இனம் அழியும், நமது நாட்டு காளையின் சக்தி குறையும் பிறகு அயல்நாட்டு காளைகளை வாங்க வேண்டும். எனவே ஜல்லிகட்டை வீரத்தமிழனாகிய நாம் ஒரு போதும் இழக்கக்கூடாது


Monday, 26 December 2016

டிச.,30-க்கு பிறகு ரூ.10,000 மேல் பழைய ரூ.500, 1000 வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம்: மத்திய அரசு புதிய திட்டம்

டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பழைய ரூ. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு அவரச சட்டம் கொண்டுவர உள்ளது. பழைய ரூ.500 மற்றும் 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டு 49 நாட்கள் ஆன பின்னரும் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு நீட்டித்து வருகிறது. இதனால் பல்வேறு தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பணப்பிரச்சனையை நீக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்ச் மாதம் வரை தட்டுபாடு நீடிக்கும் என்றும் இதனால் வங்கிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்றும் வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். 
இந்நிலையில் பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள கடைசி நாளான டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு அவற்றை மக்கள் வைத்திருக்க கட்டுபாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் குறைந்தப்பட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் அல்லது வைத்திருக்கும் தொகையின் ஐந்து மடங்கு அபராதமாக விதிக்கப்படும் என்றும் இதற்காக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 
வரும் மார்ச் வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென டிசம்பர் 30 ம் தேதிக்கு பிறகு அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடனுக்கான டிசம்பர் மாத தவணைகளில் திருப்பி செலுத்த 60 நாட்கள் கூடுதலாக  அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவி்த்துள்ளது. முறையாக கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டியில் கூடுதலாக 3 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

HI GUYS MY YOUTUBE CHANNEL INTRO PLZ WATCH AND SHARE


உன்னால் முடியாதது எதுவுமில்லை ( YOU WON EVERYTHING )

                                                                                                                                                     

Sunday, 25 December 2016

அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இன்று சோதனை செய்து பார்க்க உள்ளது. சூப்பர் பவராகும் இந்தியா :

அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்யும் பட்சத்தில் 'சூப்பர் எக்ஸ்க்ளூசிவ் கிளப்' நாடுகளின் பட்டியலில் சேர வாய்ப்புள்ளது. இதற்கு முன் அதிக தொலைவில் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி மறந்து விட்டார் அஷ்வின்’ : டோனி ரசிகர்கள் கொந்தளிப்பு

ஐசிசியின் இரட்டை விருது வென்ற இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் நன்றி மறந்து விட்டதாக டோனி  ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர். இந்தாண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் அணி வீரர் என சர்வதேச  கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இரட்டை விருதுகளை அஷ்வின் வென்றார். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுகள்  குவிந்தன. ஆனாலும், கேப்டன் டோனி ரசிகர்கள் சிலர் மட்டும் அஷ்வின் மீது கடுப்பில் உள்ளனர்.

அதற்கு காரணம், அஷ்வின் தன்னை வளர்த்து விட்ட டோனிக்கு நன்றி சொல்லவில்லை என்பதுதானாம். விருது வென்றது குறித்து அஷ்வின்  அளித்த பேட்டியில், ‘இந்த விருதை எனது குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன். ஐசிசிக்கும், குறிப்பாக எனது சக வீரர்களுக்கும் நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிக்க  விரும்புகிறேன். டோனி ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட வெற்றிடங்களை தாண்டி இளம் கேப்டனான கோஹ்லி தலைமையில் வலுவான  அணியாக உருவெடுத்துள்ளோம். இந்திய அணி இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது’ என்றார்.

இதுதான் டோனி ரசிகர்களின் கோபம். கேப்டனாக டோனியின் தலைமையின் கீழ்தான் அஷ்வின் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் கூட  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி தலைமையின் கீழ் தான் அஷ்வின் விளையாடினார். அஷ்வினுக்கு டோனி அதிகளவில்  ஆதரவளித்தாக கூறும் ரசிகர்கள், அஷ்வின் தன்னை வளர்த்து விட்ட டோனியை பெருமைப்படுத்தும் வகையில் ஒருவார்த்தை கூட  கூறவில்லையே என சோகமாகி உள்ளனர்.

இது தொடர்பாக டிவிட்டரில், ‘பழச நினைச்சு பாருங்க’, ‘உங்கள் வெற்றிப்பாதையில் டோனியின் பங்களிப்பை மறந்து விட்டீர்களா’,  ‘உங்களிடமிருந்து இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை’ என டோனி ரசிகர்கள் மட்டுமின்றி, அஷ்வின் ரசிகர்கள் என கூறிக் கொள்ளும்  சிலரும் கூட டிவிட்டரில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். 

கோஹ்லியை முந்திய சிந்து

கூகுள்' தளத்தில் தேடப்பட்ட இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் கோஹ்லி, தோனியை முந்தி பாட்மின்டன் வீராங்கனை சிந்து முதலிடம் பிடித்தார்.
இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் சிந்து, 21. கடந்த ரியோ ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்று அசத்தினார். சமீபத்திய சீன மற்றும் ஹாங்காங் ஓபனில் பட்டம் வென்றார். இந்நிலையில், 'கூகுளில்' தேடப்படும் இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி, கோஹ்லியை முந்தினார். தவிர, முன்னாள் வீரர் சச்சினையும் பின்தள்ளினார். இவர்களைத்தவிர, 'டாப்-10' பட்டியலில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மற்றும் தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), சானியா (டென்னிஸ்) உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.

Namba tamilnattu makkala engayu vala vidamatranga பாரீஸில்தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை

பாரீஸ்:பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், கொள்ளை முயற்சியில் நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26). இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் எந்திர பொறியியல் படித்து பட்டம் பெற்றுவிட்டு, அங்கேயே என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் இவர் தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக பாரீஸ் பதினைந்தில் உள்ள 12ம் எண் மெட்ரோவில் உள்ள வாகிரார்டு மெட்ரோ நிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது அவர் அந்த மெட்ரோ நிலையத்துக்கு வெளியே நெஞ்சிலும், கழுத்திலும் கத்தியால் குத்தப்பட்டார். ரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் அப்படியே நண்பரின் வீட்டுக்கு சென்று அழைப்பு மணியை ஒலித்து விட்டு, அங்கு சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.இதுதொடர்பாக பாரீஸ் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், கொலையாளியை தேடியும் வருகிறார்கள்.கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. யாரேனும் திட்டமிட்டு கொன்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ரொக்கமில்லா பொருளாதாரமே எதிர்காலம்: பிரதமர்

ரொக்கமில்லா பொருளாதாரமே இந்தியாவின் எதிர்காலம் என பிரதமர் மோடி பேசினார். இந்த வருடத்தின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நாளில் சேவை மனம் தழைத்தோங்கட்டும். இயேசுநாதர் ஏழை மக்களுக்காக உழைத்ததுடன், சேவையை பாராட்டினார். இந்திய கல்வியில், புதிய வழிமுறையை அறிமுகம் செய்த மதன்மோகன் மாள்வியாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தியாவுக்கு செய்த சேவையை யாராலும் மறந்து விட முடியாது.
ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நன்றி;
ரொக்கமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க குலுக்கல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இன்று அமலாகிறது. 15 ஆயிரம் பேருக்கு தினமும் பரிசு வழங்கப்படும். வருமான வரியையும் மின்னணு முறையில் செலுத்தலாம். இந்தியாவை ரொக்கமில்லா நாடாக மாற்ற வேண்டும் என உங்களை வேண்டுகிறேன். ரொக்கமில்லா பொருளாதாரமே இந்தியாவின் பொருளாதாரம் ஆகும். மின்னணு கட்டண முறை தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும், மக்கள் படும் சிரமத்தை எடுத்து சொல்லியும் எனக்கு அதிகம் பேர் கடிதம்எழுதியுள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நன்றி எனக்கூறினார். 

Saturday, 24 December 2016

SHORT FILM CREATE GREAT AWARENESS ON THIS WORLD

                                   

THIS SHORT FILM IS CREATED BY M.A.M.COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY STUDENTS.

DIRECTER BY              :LINGESAVAN SELVARAJ
CINEMATOGRAPHY : KARTHIK RAJA
CAST                               : AL AFALIQ
PUBLISHER                  : ABDUL RAHUMAN




MY BEST WISHES MY DEAR FRIENDS ( HAPPY CHRISTMAS)





                                    

இந்தியா வளிமண்டலத்தில் அதிகளவில் பரவியுள்ள அமோனியா படலம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

                                                                         இந்தியா வளிமண்டலத்தில் அதிகளவில் பரவியுள்ள அமோனியா படலம்
                   உலகின் வளிமண்டலத்தில்       டிரோபோஸ்பியருக்கு மேலாக அமோனியா வாயு படலம் பரவியிருப்பதை முதன் முதலாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த அம்மோனியா படலம் இந்தியா மற்றும் சீன நாட்டிற்கு மேல் வளிமண்டலத்தில் உலகின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிக அளவு பரவி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய சீன வளிமண்டலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 12 கி,மீ., மற்றும் 15 கி.மீ., க்கு இடைப்பட்ட உயரத்தில் இந்த வாயு படலம் பரவி உள்ளது
                                                                                      காரணம் :
அம்மோனியா வாயு பரவி இருப்பதற்கு காரணம் இந்த இரு நாடுகளிலும் விவசாயத்திற்கு அதிக அளவில் யூரியா பயன்படுத்தப்பட்டது தான் என்று தெளிவாகி உள்ளது. பயிர்கள் செழித்து வளர யூரியா உரம் மிகவும் அவசியமாக இருப்பதால் இவை இந்த இருநாடுகளிலும் பயன்படுத்தபடுகின்றன.
அமோனியாவால் ஏற்படக்கூடிய மாற்றம் :
வளிமண்டலத்தில் பரவியுள்ள இந்த அமோனியா வாயு பூமியின் தட்பவெப்ப நிலையை மாற்றக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது. மேகங்களின் தன்மையை இந்த அமோனியா மாற்ற கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவை வளிமண்டலத்தில் குளிர்ச்சியை அதிகரிக்க செய்து மேகங்களின் உற்பத்திக்கும் உதவியாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அம்மோனியா வாயுவால் அடிவானம் இனி வரும் காலங்களில் சூரியனின் சிவப்பு நிற கதிர்களால் அலங்கரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Friday, 23 December 2016

ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்

ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, தற்போது ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி, நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையத்தில், மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை :

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, நவம்பர் 10ம் தேதி தினமும் 3.5 மில்லியன் ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வந்தது. தற்போது, இங்கு தினமும், 19 மில்லியன் அளவுக்கு பல மதிப்புகள் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.500 நோட்டுகள் மட்டும் தினமும் 10 மில்லியன் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. மற்றவை ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன என்றார். ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

நாடு முழுவதும் திறந்தவெளிகளில் குப்பையை எரித்தால் ரூ.25,000 அபராதம் 

புதுடெல்லி : நாடு முழுவதும் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதற்கு தேசிய பசுமைத்  தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அதிக குப்பைகளை எரித்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. குப்பைகளை திறந்த வெளிகளில் எரிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்று கூறி, இதற்கு தடை கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த தீர்ப்பாய தலைவர் நீதிபதி சுவதந்தர்  குமார் நேற்று பிறப்பித்த உத்தரவு: தனிநபரோ அல்லது உள்ளாட்சி உள்பட பிற அமைப்புகளோ, திறந்த  வெளியில் குப்பையை எரிக்கும் போது, சுற்றுச்சூழல் இழப்பீடாக அபராதம்  செலுத்தியாக வேண்டும். சிறிய அளவிலான குப்பையை எரித்தால் ஒரு முறைக்கு ரூ.5  ஆயிரமும், குப்பைக் கிடங்கு போல் மொத்தமாக எரித்தால் ஒரு முறைக்கு ரூ.25  ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 4 வாரங்களுக்குள் ஒரு செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும். மேலும், மெல்லிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பது  குறித்து மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும், அனைத்து மாநில அரசுகளும் 6  மாதங்களுக்குள் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இதுதவிர, 2016ம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மைச் சட்ட விதிகளை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாஸ்போர்ட் பெற பிறப்புச்சான்றிதழ் கட்டாயம் விதிமுறை தளர்வு: வெளியுறவுத்துறை

பாஸ்போர்ட் பெற பிறப்புச்சான்றிதழ் தேவையில்லை எனவும் பிறப்பு தேதியுடன் கூடிய பான்கார்டு போன்ற ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளை தளர்த்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்புச்சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. பிறப்புச்சான்றிதழுக்கு பதில் பிறப்பு தேதியுடன் கூடிய பான்கார்டு, மாற்றுச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவைற்றை பிறப்புச்சான்றிதழுக்கு ஆதாரமாக வழங்கலாம்.
மணமானவர்கள் திருமணச்சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற தேவையில்லை. தளர்த்தபட்ட இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
1989 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பிறப்புச்சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என்பது கட்டயம் என்ற விதி தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விதியை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

France Opens Up the World’s First Solar Panel Road














Photo of Wattway Testing Facilities [Image Source: Wattway/Colas]


The road runs through the tiny town of Tourouvre-au-Perche in Normandy. In total, the population is about 3,400 people. French Environment Minister Segolene Royal said the road could generate enough electricity to safely power the street lamps.
The price tag of the 1 km road? Roughly $5.2 million (5 million Euros). The construction company Wattway by Colas crafted the technology.


The panel road must endure two years of trials and testing. During that time, output and lifespan will be the two key components measured as to whether or not the road will become permanent. Wattway’s director Jean-Charles Broizat said in a statement:
“We are still on an experimental phase. Building a trial site of this scale is a real opportunity for our innovation. This trial site has enabled us to improve our photovoltaic panel installing process as well as their manufacturing, in order to keep on optimizing our innovation.”
Some of the biggest concern stems from the weight of cars traveling over the panels. An estimated 2,000 motorists will traverse the road each day.
And while the road undoubtedly expands the potential of solar panels, critics disagree with the cost efficiency. In an interview with Le Monde, Vice President of the Network for Energetic Transition (CLER) said: “It’s without doubt a technical advance, but in order to develop renewables there are other priorities than a gadget of which we are more certain that it’s very expensive than the fact it works.”
However, Wattway’s parent company Colas already announced plans to significantly cut production and repair costs.
Wattway said the innovative product comes out of a five-year labor of love. Wattway merged Colas’ infrastructure background with the French National Institute for Solar Energy.
And as for the worries that traffic will block solar rays? Wattway has two answers. First, the company reports that paved roads are occupied 10 percent of the time. Second, it only takes 20 square meters of panelling to generate enough electricity to power a home.