Thursday, 29 December 2016

உங்களுக்கு எது தேவை? முடிவு செய்யும் ஃபேஸ்புக்!

மோடி 500,1000 ரூபாய தடை பண்ணா,விராட் கோலி செஞ்சுரி அடிச்சா, புதுசா விஜய் பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆனா உடனே நம்ம ஃபேஸ்புக் டைம்லைன்ல தெரியுதே எப்படினு என்னிக்காவது யோசிச்சிருக்கீங்களா? ஃபேஸ்புக் உங்க டைம்லைன வைச்சு மிகப்பெரிய வேலைய பாத்துக்கிட்டு இருக்கு. இதுல வியாபாரம், மக்களை இணைப்பதுனு பல விஷயங்களை தெறிக்க விடுவது தான் மார்க் உத்தி....
ஃபேஸ்புக் டைம்லைன்ல முன்னாடியெல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ் போடுற ஸ்டேட்டஸ், சம்பந்தமே இல்லாம ஒரு நியூஸ் இது தான் டைம்லைன்ல இருக்கும். இதையெல்லாம் மாத்த ஃபேஸ்புக் புதிய உத்தியை கையில் எடுத்தது. அதுனால தான் இன்னிக்கு எந்த செய்தியையும் நம்ம டைம்லைன்ல மிஸ் பண்ணாம பார்க்க முடியுது. இந்த ஐடியா எப்படி வந்ததுனு சமீபத்துல ஒரு பேட்டில பதில் சொன்ன மார்க் ''உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்த செய்தியை அவர் பதிவிட்டு இருக்கிறார்'' அந்த செய்தியை ஐந்து மணி நேரம் கழித்து ஃபேஸ்புக்கிற்குள் நுழைந்த என்னால் பார்க்க முடியவில்லை. பல செய்திகள் அதனை முந்தி சென்று விட்டன. அப்போது தான் டைம்லைனில் சில முக்கியமான விஷயங்களை அறிமுகம் செய்ய விரும்பினோம் என்றார்
உங்களோட நட்பு வட்டாரத்துல இருக்குற நண்பர்கள் யாரோட பதிவு வந்தாலும் அது உங்களுக்கு முதல்ல தெரியுற மாதிரி ''See First'' ஆப்ஷனா தேர்ந்தெடுத்து வைச்சுக்கலாம்.  அதுமட்டுல்லாம சில ஃபேவரைட் பக்கங்கள நம்மளோட நோட்டிஃபிகேஷன் வர்ற மாதிரி செட் செஞ்சு வைச்சுக்கலாம். ஆனா இது எல்லாமே ஒருவரோட விருப்பத்தின் அடிப்படைல  இருக்கறது இத தாண்டி தான் ஃபேஸ்புக் ஒவ்வொருத்தரோட டைம்லைனையும் வடிவமைக்குது. 
நியூஸ் ஃபீடில் வரும் செய்திகள் அதனை லைக் செய்பவர்கள், கமெண்ட் செய்பவர்கள், ஷேர் செய்பவர்கள் இவற்றின் அளவை பொருத்து அதன் ரீச் இருக்கும். அதிக பேர் விரும்பும் செய்திகளை உங்கள் டைம்லைனில் முக்கியமான செய்தியாகவும், வேறு ஒரு தளத்தில் உங்கள் நண்பரால் லைக், கமெண்ட் செய்யப்பட்ட செய்திக்கு முக்கியத்துவம் அளித்தும் டைம்லைனை வடிவமைக்கிறது.
அதன் பின்பு ஒருவரது தேடுதல் பேட்டர்னை வைத்து நிர்ணயிக்கிறது. அதாவது ஒருவர் உணவு தொடர்பான பக்கங்களை அதிகமாக தேடுகிறார் என்றால் அவருக்கு அது தொடர்பான செய்திகளை முன்னிலை படுத்தி காட்டுவது. ஒருவர் சினிமா தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்றால் அவரது விருப்ப பக்கங்கள் சினிமா தொடர்பாக பகிரும் செய்திகள் அவருக்கு முதலில் வருவது போன்றும் டைம்லைனை வடிவமைக்கிறது ஃபேஸ்புக். 

ஃபேஸ்புக் தனது நியூஸ் ஃபீடில் பதியப்படும் நம்பகத்தன்மையற்ற பதிவுகளை அதிகப்பேருக்கு டைம்லைனில் காட்டமலும், சில மோசமான பதிவுகளை நீக்கியும் தனது டைம்லைனின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. மிகவும் பழைய செய்திகளை நண்பர்கள் விரும்பும் போது அதனை நீண்ட நேரம் டைம்லைன் ஃபீடில் அனுமதிகாமல் இருப்பதிலும் உயிர்ப்புத்தன்மை குறையாமல் பார்த்து கொள்கிறது ஃபேஸ்புக்.

ஒருவரது விருப்பம் என்பதை தாண்டி அவர் எந்த மாதிரியான பதிவை விரும்புகிறார் ஆடியோ, வீடியோ, இணையதள லின்க்குகள் என அவர் விரும்பும் பதிவை விரும்பும் வடிவத்திலும் தருகிறது ஃபேஸ்புக். ஒருவேளை நீங்கள் ஒரு வீடியோ விரும்பியாக இருந்தால் உங்கள் டைம்லைனில் பெரும்பாலான பதிவுகளை வீடியோவாக தர ஃபேஸ்புக் முயற்சிக்கும். நீங்கள் பயன்படுத்தும் டேட்டா மீது அதிக கவனம் செலுத்துபவராக இருந்தால் அதிமகாக ''ஃபேஸ்புக்கின் இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள்'' களை படிப்பவராக இருந்தால் அந்த பதிவுகளை அவருக்கு அதிகமாக வழங்குகிறது ஃபேஸ்புக்.
இப்படி ஒவ்வோரு நொடியும், ஒவ்வோரு நபருக்கு தகுந்தவாறு ஃபேஸ்புக் டைம்லைனை மாற்றியமைக்கிறது ஃபேஸ்புக்.  2 பில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்த சமூக வலைதளம் ஒவ்வோரு நொடியும் டைம்லைனை அனைவருக்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கிறது என்றால் அதன் அல்காரிதம் எழுதப்பட்டுள்ளது. அனைத்து செய்திகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் நபருக்கு ஏற்றவாறு வழங்கும் ஃபேஸ்புக் விளம்பரங்களையும் இடம், விருப்பம், தேடல் அடிப்படையில் வழங்குகிறது.
உலகில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இணைய சேவைகளில் ஃபேஸ்புக்கும் ஒன்று. சில சறுக்கல்கள் இருந்தாலும் டைம்லைனை கில்லியாக வைத்திருக்க ஃபேஸ்புக் நிறைய மெனக்கெடுகிறது. அதனால் நிறைய வருமானமும் ஈட்டுகிறது. ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ், ஃபேஸ்புக் லைவ், புகைப்படங்களுக்கான புதிய டூல், மக்களின் ரீயாக் ஷன் என டம்லைன் வடிவமைப்பில் பெரிய உத்தியுடன் களமிறங்கும் ஃபேஸ்புக் விரைவில் அனைத்து இணையதளங்களுக்கும் மாற்றான ஒற்றை இணையதளமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

No comments:

Post a Comment