ரொக்கமில்லா பொருளாதாரமே இந்தியாவின் எதிர்காலம் என பிரதமர் மோடி பேசினார். இந்த வருடத்தின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நாளில் சேவை மனம் தழைத்தோங்கட்டும். இயேசுநாதர் ஏழை மக்களுக்காக உழைத்ததுடன், சேவையை பாராட்டினார். இந்திய கல்வியில், புதிய வழிமுறையை அறிமுகம் செய்த மதன்மோகன் மாள்வியாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தியாவுக்கு செய்த சேவையை யாராலும் மறந்து விட முடியாது.
ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நன்றி;
ரொக்கமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க குலுக்கல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இன்று அமலாகிறது. 15 ஆயிரம் பேருக்கு தினமும் பரிசு வழங்கப்படும். வருமான வரியையும் மின்னணு முறையில் செலுத்தலாம். இந்தியாவை ரொக்கமில்லா நாடாக மாற்ற வேண்டும் என உங்களை வேண்டுகிறேன். ரொக்கமில்லா பொருளாதாரமே இந்தியாவின் பொருளாதாரம் ஆகும். மின்னணு கட்டண முறை தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும், மக்கள் படும் சிரமத்தை எடுத்து சொல்லியும் எனக்கு அதிகம் பேர் கடிதம்எழுதியுள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நன்றி எனக்கூறினார்.
No comments:
Post a Comment