ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, தற்போது ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி, நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையத்தில், மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை :
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, நவம்பர் 10ம் தேதி தினமும் 3.5 மில்லியன் ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வந்தது. தற்போது, இங்கு தினமும், 19 மில்லியன் அளவுக்கு பல மதிப்புகள் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.500 நோட்டுகள் மட்டும் தினமும் 10 மில்லியன் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. மற்றவை ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன என்றார். ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
No comments:
Post a Comment