Sunday, 19 November 2017

என்ன கொடுமைடா இது....!!!! டிஎன்பிஎஸ்சி தேர்வை வெளி மாநிலத்தவரும் எழுதலாமா!!!!!

சென்னை:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.இதற்காக ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற வெறியோடு எழுதி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அந்த புது விதியில் வெளிமாநிலத்தவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதலாம் என்றும் வெற்றி பெறும் வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவர்க்கு போட்டித் தேர்வுகளில் எந்த காரணத்திற்காக அனுமதி அளித்தது என்று ஒரே குழப்பமாக உள்ளது.                            அரசின் இந்த அறிவிப்பு மாநில இடஒதுக்கீட்டிற்கே கேடு விளைவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.. வேலைவாய்ப்புக்காக தமிழக இளைஞர்களே காத்திருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற கேள்விக்கு விடை கல்வி நிபுணர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, 18 November 2017

என்ன கொடுமைடா இது....!!!! டிஎன்பிஎஸ்சி தேர்வை வெளி மாநிலத்தவரும் எழுதலாமா!!!!!


சென்னை:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.இதற்காக ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற வெறியோடு எழுதி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அந்த புது விதியில் வெளிமாநிலத்தவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதலாம் என்றும் வெற்றி பெறும் வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவர்க்கு போட்டித் தேர்வுகளில் எந்த காரணத்திற்காக அனுமதி அளித்தது என்று ஒரே குழப்பமாக உள்ளது.அரசின் இந்த அறிவிப்பு மாநில இடஒதுக்கீட்டிற்கே கேடு விளைவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.. வேலைவாய்ப்புக்காக தமிழக இளைஞர்களே காத்திருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற கேள்விக்கு விடை கல்வி நிபுணர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Miss world india 2017

இந்தியா 17 வருடங்களுக்கு அடுத்தாக Miss worldல் வெற்றி கிரிடத்தை அடைந்துள்ளது. The new miss world was manusha chhillar.
                                                           இவரின் வயது 20 . பிரியங்கா சோப்ராவிற்கு அடுத்த Miss world இவரே.                                                                      Manusha chhillar ஹரியானாவை சேர்ந்தவர் தற்போது மருத்துக்கல்லூரியில் படித்து வருகிறார்.

வருது.. வருது.. புதுசா 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள்.. அடுத்த வாரம் வங்கக்கடலில் உருவாகிறது!

வருது.. வருது.. புதுசா 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள்.. அடுத்த வாரம் வங்கக்கடலில் உருவாகிறது!

டெல்லி: வங்கக்கடலில் அடுத்த வாரம் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் இதுவரை வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவானது. முதலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சுமார் 10 நாட்கள் மழை பெய்தது.

குறிப்பாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்ததால் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை ஓய்ந்தது.

கடலில் பெய்த மழை

பின்னர் 3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. ஆனால் இதனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் பெரும்பாலான மழை கடலிலேயே பெய்தது.

தமிழகத்தில் மழை இல்லை

பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடதிசையில் நகர்ந்து ஒடிஷா நோக்கி சென்று விட்டது. இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைந்து தற்போது மழை முற்றிலும் நின்றுவிட்டது.

2 புதிய காற்றழுத்த தாழ்வுகள்

இந்நிலையில் வங்க கடலில் அடுத்த வாரம் புதிதாக 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை சராசரியை விட குறைந்த அளவே பெய்துள்ளதால் கலக்கமடைந்த மக்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியளித்துள்ளது.

இந்திய வானிலை மையம் தகவல்

வரும் 21ம் தேதி அந்தமான் அருகேயும், தென்கிழக்கு வங்க கடலில் வரும் 27ம் தேதியும் அடுத்தடுத்து 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத்தை பொறுத்தவரை பெரும்பாலும் அது தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

இருப்பினும் காற்றின் சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

Friday, 17 November 2017

ABOUT CHENNAI .....!!!!! நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி  தகவல்

கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பிற்காலத்தில் தண்ணீரால் மூழ்கப் போகும் நகரம் பற்றி  நாசா வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது 

கடலில் இருக்கும் மலை போன்ற ராட்சத ஐஸ் மலைகள் உருகி வருவது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி நடப்பதில்லை என்பது நமக்கு தெரிந்த ஒன்றே..

அவ்வாறு கடல்நீர்மட்டம் உயர்ந்துவிட்டால்,அண்டார்டிகா, க்ரீன்லேண்ட், மங்களூர் ஆகிய பகுதிகளில் கடல் மட்டம் அதிகளவில் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது 

 

மும்பையை பொருதவரை 1.526 மி.மீ., 
அண்டார்டிகா, க்ரீன்லேண்ட், மங்களூர் 1.598 மி.மீட்டராக நீர்மட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

 

 

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும் போது,இவ்வாறு கடல் நீர்மட்டம் உயர்ந்தால் அதிகளவில் எந்தெந்த  நகரம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய கிரேடியன்ட் பிங்கர் பிரின்ட் மேப்பிங் என்ற புதிய கருவி ஒன்றை நாசா கண்டுபிடித்துள்ளது.

இந்த கருவி மூலம் சுமார் 293 முக்கிய நகரங்களில் மேற்கொண்ட ஆய்வு மூலம் எந்த நகரம் அதிகம் பாதிக்கப்படும் என அறியப்பட்டு உள்ளது. 

பாதிக்கப்படும் இடங்கள் 

க்ரீன்லேண்டின் (வடக்கு, கிழக்கு பகுதி ஐஸ் மலை) - நியூயார்க் பாதிக்கப்படும். 
கிரீன்லேண்டின் (வடமேற்கு பகுதி ஐஸ் மலை) -லண்டன் பாதிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

க்ரீன்லேண்ட் மற்றும் அண்டார்டிகாவில் ஐஸ் மலைகள் - தெற்கு ஆசியாவில் உள்ள சிட்டாகாங், கொழும்பு, கராச்சி ஆகிய நகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுமாம்.
நாசாவின் இந்த தகவலால், மங்களூர் மும்பை மற்றும் வெளிநாடுகளில் கணிக்கப்பட்ட சில இடங்களில் மக்கள் சற்று பதற்றம் அடைந்து உள்ளனர் 

 குறிப்பு : மங்களூர்  மூழ்கும்  என  தெரிவித்த  நாசா சென்னை  பற்றி  எந்த  தகவலும் தெரிவிக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது 

Naai kadi itha nee padi (நாய் கடித்ததில் கல்லூரி விரிவுரையாளர் பலி)

திருச்சி அருகே நாய் கடித்ததில் கல்லூரி விரிவுரையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே நாய் கடித்ததில் கல்லூரி விரிவுரையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த செவலூர் திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் குகன்ராஜ்(வயது 29). இவர் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற நாய் குகன்ராஜை கடித்தது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் வழக்கமாக கல்லூரிக்கு சென்று தன் பணியை தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குகன்ராஜூக்கு காய்ச்சல் ஏற்படவே, மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு கல்லூரிக்கு சென்று விட்டார்.

கல்லூரியில் இருந்த குகன்ராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே கல்லூரியில் உள்ளவர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு குகன்ராஜ் யாரையும் அருகில் வரவிடாமல் திடீரென ஆக்ரோ‌ஷமாக காணப்பட்டார். அவரை கட்டுப்படுத்த முடியாத அளவில் அவரின் ஆக்ரோ‌ஷம் இருந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் குகன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்ததால் ஏற்பட்ட பாதிப்பில் குகன்ராஜ் இறந்ததால் மருத்துவமனையில் இருந்து அவரின் உடலை கொடுக்கப்படவில்லை. அவரது உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

இருப்பினும் இறந்தவரின் உடல் அருகில் யாரையும் மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு குகன்ராஜின் உடலை மருத்துவமனை பணியாளர்களே எடுத்துச் சென்று தகனம் செய்தனர். மேலும் நாய் கடித்ததால் குகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது.

மணப்பாறை செவலூர் பகுதியில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரியும் நிலையில் பலரும் இதுபோன்று நாய்க்கடிக்கு ஆளாக வேண்டிய நிலை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் குகன்ராஜ் உயிரிழந்துள்ளார். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்காவிடில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Thursday, 16 November 2017

உலகின் மிகப் பெரிய வைரம் see detail below link

ஜெனிவா, உலகின் மிகப் பெரிய, குறைபாடுகள் இல்லாத வைரம் ரூ.219.79 கோடிக்கு ஜெனிவாவில் நடந்த ஏலத்தில் விற்பனையானது.

ஆப்பிரிக்காவின் அங்கோலா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரமே உலகத்தின் மிகப் பெரிய வைரம் என்று கூறப்படுகிறது. வெட்டியெடுக்கப்படுவதற்கு முன்பு இது 404 காரட்டுகளைக் கொண்டிருந்தது. வடிவமைப்புக்குப் பிறகு இந்த முதல் தர வைரம் வெள்ளை நிறத்தில் தீப்பெட்டியின் அளவு மற்றும் வடிவத்தில் உள்ளது. சுமார் 7 செ.மீ. (2.7 அங்குலம்) நீளம் கொண்ட இந்த வைரம் 163 காரட்டுகள் கொண்டது.

ஜெனிவாவில் உள்ள கிறிஸ்டி என்னும் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. முன்னதாக இந்த வைரம் ரூ.193.7 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைவிட அதிகமாக ரூ.219.79 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது

Attention jio user: recharge 399 you get cashback upto 2599 see below

ஜியோ கம்பெனி இப்போது தனது வாடிக்கையாளருக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ அதன் பிரதம (பிரைம் ) வாடிக்கையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை அறிவித்துள்ளது. உண்மையில் இது ஒரு ரொக்கநேர சலுகை அதாவது ஆங்கிலத்தில் கேஷ்பேக் என்று கூறுவார். இது பிரதான  வாடிக்கையாளர்களுக்கானது.

- படங்கள் மூல: Google படங்கள்

அதே நேரத்தில், ரூ. 399 அல்லது அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு  ரிச்சார்ஜிக்கும் ரூ 2,599 வரை டிஜிட்டல் ரொக்கமாக வழங்கப்படும். ரூ.300 மற்ற ரிசார்ஜ்ஜிற்கு வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, இதற்காக பல முன்னணி இ-காமர்ஸ் கம்பெனி களுடன் இணைந்துள்ளது. இதன் கீழ், 1,899 ரூபாய் ரொக்கப் பணப்பரிமாற்றம் ரீசார்ஜ் செய்யப்படும்.

- படங்கள் மூல: Google படங்கள்

அமேசான் பே, PayTM, Mobikwik, PhonePe, Axis Pay மற்றும் Freecharges ஆகியவற்றை உள்ளடக்கிய பார்ட்னர் மூலம் இந்த டிஜிட்டல் பணத்தை ரொக்கமாக மற்ற இயலும். இருப்பினும், ஒரு பணமாற்றத்திற்கு ரூ 500 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். ரிலையன்ஸ் போக்குகள் மூலம் ஷாப்பிங் செய்தல், ஜியோ பிரைமர் வாடிக்கையாளர்கள் ரூ 1,999 வாங்குவதற்கு 500 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ பிரதம வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரதம சலுகைகள் நவம்பர் 10 முதல் நவம்பர் 25 வரை செல்லுபடியாகும். JIO ரொக்க கையிருப்பு வவுச்சர்கள் என் Jio அப்ப்ளிகேஷனில் காணப்படும் ரூ 50, 8 டோக்கன்களைக் கொண்டிருக்கும். நவம்பர் 15 முதல் நீங்கள் அதை ரெட்இம் செய்துகொள்ளலாம்.

Wednesday, 15 November 2017

அம்மா திட்ட முகாம்

அரியலூர் வட்டம், அமீனாபாத், கீழையூர், உடையார்பாளையம் வட்டம் கோடங்குடி(தெற்கு), பருக்கல் (கிழக்கு), ஆண்டிமடம் வட்டம் வரதராஜன்பேட்டை,செந்துறை வட்டம் தளவாய் ஆகிய 6 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும், இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி  தீர்வு காணப்படும்.  எனவே, பொதுமக்கள் இந்த சந்தர்ப்பம் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tuesday, 14 November 2017

இந்தியாவில் ஜியனி M7 பவர ( 5000MAh & 4GB RAM) vs  Oppo F5 மற்றும் Vivo V7 

சீனா கைபேசி உற்பத்தியாளர் Gionee இந்தியாவில் அதன் தயாரிப்பை தொடங்கியது gionee M7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கூடிய விரைவில் வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Gionee M7 பவர் ஸ்மார்ட்போன் நவம்பர் 15 இந்தியாவில் அறிமுகம் செய்ய படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. Gionee M7 பவர் சீனாவால் முதல் முதலாக விண்வெளிக்கு அனுப்பப் படும் என்று கருது ஒன்று இருந்தது. 

டெக் அம்சங்கள் :

Gionee M7 பவர் 2 சிறப்பு அம்சங்கள், 5000mAh பேட்டரி மற்றும் 18: 9  விகித காட்சி ஆகும். சுமார் 20,000 ரூபாயில் இந்தியாவில் ஜியனி M7 பவர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இந்திய சந்தையில் அதன் ப்ளூ , பிளாக் அண்ட் கோல்ட் நிறத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோனி M7 பவர் Oppo F5 மற்றும் Vivo V7 + போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிட ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜியனி M7 பவர் 6 அங்குல, 18: 9 அம்ச விகிதங்கள், முழு HD காட்சி கொண்டிருக்கும். இது 4GB ரேம், மற்றும் 64GB உள்ளடிக்கிய சேமிப்பு, 1.4GHz octa- கோர் ஸ்னாப் டிராகன் ௪௩௫ ப்ரோசிஸோர்  மூலம் இயக்கப்படுகிறது . மைக்ரோ SD அட்டை வழியாக சேமிப்பை 256GB வரை அதிகரிக்கப்படலாம். இது அண்ட்ராய்டில் nougat 7.1 இயங்குதளத்தில் இயங்குகிறது , அமிகோ ஓஎஸ் 5.0 அடிப்படையில். இந்த தொலைபேசி கலப்பின இரட்டை சிம் அட்டையை ஆதரிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா எல்இடி பிளாஷ் மற்றும் 8MP முன் கேமரா கொண்டுள்ளது. M7 பவர் வேகமாக சார்ஜ் செய்யும் ஒரு 5000mAh பேட்டரி உடன் இணைக்கப்பட்டுள்ளது. கைபேசியில் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளது.

இத்தனை சிறப்பம்சங்களோடு இந்தியாவில் வேலையாக உள்ள இந்த ஸ்மார்ட்போன் நீங்கள் வாங்க விரும்பினால் இன்னும் சில நாட்கள் காத்திருத்தல் வேண்டும்.

மேலும் இந்த செய்தியை பற்றி உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்க கமெண்ட் செக்சனில் எழுதவும்.

Sunday, 5 February 2017

Pallivasal kattumana panikaga panam thevai padugirathu

Pallivasal kattumana panikaga panam thevaipadugirathu thangalal mudintha alavuku pana oothavi,pira palli kattu mana pani sammantha oothavi seiyumari thalmaiyudan kettu kolgiren contact 9578411125 Rahman. Palli thalaivar 9443493768 thajutheen, seyalaalar 9865542017 saiyath ali, porulaalar 9843286144 nasir ahamed
Profit : atharkana kooliyai valla nayagan allah immaiyilo marumaiyilo kodupan

Sunday, 22 January 2017

Jallikattu porattam thadai seiyappattu ullathu

Manavargalai veliyetrum nadavedikkai police merkolkintranar. Ithu varum kalangalil ithai vida  maperum purattchiya valukka perum vaippu ullathu.

Tuesday, 17 January 2017

கல்லூரி மாணவர்கள் கூட்டம் படி படியாக உயர்ந்து கொண்டே உள்ளது.

திருச்சி மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிகட்டு ஆதரவுக்காகவும் , போரடிய தமிழர்களை கைது செய்ததை கண்டித்தும், தமிழக அரசியல் துரோகிகளையும் , இ(ஹி)ந்திய PETA கைக்கூலிகளை எதிர்த்தும்    திருச்சி  மத்திய பகுதியான Toll plazaவில் போராட்டம் வெடிக்கச் ஆரம்பிக்கிறது .

students are take selfi with our friends

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில்

# புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் (18.1.2017) இன்று அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிகட்டு ஆதரவுக்காகவும் , போரடிய தமிழர்களை கைது செய்ததை கண்டித்தும், நமது உரிமையான ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை கோரியும் New Bus Stop -ல்    காலை 11 மணியளவில் ஒன்று கூடுவோம்.......
#WE #DO #JALLIKKATTU
plz share ............

காகிதத்தில் செய்த நுண்ணோக்கி!

'பள்ளிக் குழந்தைகள் பாக்கெட்டில் பென்சில் இருப்பது போல, ஒரு நுண்ணோக்கியும் இருக்கும்படி செய்ய வேண்டும்' என்கிறார் மனு பிரகாஷ். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரி விஞ்ஞானியாக இருக்கிறார். இவரும், இவரிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவர் ஒருவரும் சேர்ந்து, 2010ல், 'போல்ட் ஸ்கோப்' என்ற நுண்ணோக்கியை உருவாக்கினர். காகிதத்தை வெட்டி அழகாக ஒட்டும் ஜப்பானிய, 'ஓரிகமி' கலையின் உந்துதலில் உருவாக்கப்பட்டதுதான் போல்ட் ஸ்கோப். ஆம், இது கெட்டியான காகிதத்தை வெட்டி, எளிய லென்ஸ் ஒன்றையும் வைத்து தயாரிக்கப்பட்ட எளிய நுண்ணோக்கி. போல்ட் ஸ்கோப் நுண்ணோக்கி அட்டையை வாங்கி, எவரும் சில நிமிடங்களில் ஒரு நுண்ணோக்கியை உருவாக்க முடியும்; இதன் விலை, 66 ரூபாய். 'போல்ட் ஸ்கோப் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்' என்ற நிறுவனத்தை மனு பிரகாஷ் துவங்கி, போல்ட் ஸ்கோப்களை உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அனுப்பினார்.மொத்தம் 50 ஆயிரம் பேர் இதை தங்கள் தேவைக்கேற்ப, நோய் கிருமிகள் ஆராய்ச்சி, பூச்சிகள், நுண்ணுயிரிகள் ஆராய்ச்சி, சிறிய உயிரினங்களை புகைப்படம் எடுப்பது போன்ற எதிர்பாராத முறைகளில் பயன்படுத்தி அசத்தியிருக்கின்றனர்.போல்ட் ஸ்கோப்பை பயன்படுத்துவோர் தங்கள் கண்டுபிடிப்புகளை பகிர, 'மைக்ரோ காஸ்மாஸ்' என்ற இணைய குழுமத்தை உருவாக்கியிருக்கிறார் பிரகாஷ். இதில், பல நாடுகளைச் சேர்ந்த பயனாளிகள் தினமும் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். 2017ல், உலகெங்கும், 10 லட்சம் பேருக்கு இதை வினியோகிக்க வேண்டும் என்பது பிரகாஷின் இலக்கு.இதற்காக கிக் ஸ்டார்டர் இணையதளத்தில், 35 லட்சம் ரூபாய் நிதி தேவை என்று ஆதரவு கேட்டிருந்தார் பிரகாஷ். ஆனால், இதுவரை, 2.67 கோடி ரூபாய்க்கு மேல் நிதி குவிந்து விட்டது!

இன்று திருச்சி மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிகட்டு ஆதரவுக்காகவும் , போரடிய தமிழர்களை கைது செய்ததை கண்டித்தும், தமிழக அரசியல் துரோகிகளையும் , இ(ஹி)ந்திய PETA கைக்கூலிகளை எதிர்த்தும் திருச்சி மத்திய பகுதியான Toll plaza போராட்டம் வெடிக்கச் செய்வோம்.

இன்று திருச்சி மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிகட்டு ஆதரவுக்காகவும் , போரடிய தமிழர்களை கைது செய்ததை கண்டித்தும், தமிழக அரசியல் துரோகிகளையும் , இ(ஹி)ந்திய PETA கைக்கூலிகளை எதிர்த்தும்    திருச்சி  மத்திய பகுதியான Toll plaza போராட்டம் வெடிக்கச் செய்வோம். போரட்டத்தில் ஈடுபட துடிக்கும் புரட்சியுள்ளம் கொண்ட மாணவர்கள் தங்கள் கல்லூரிகளில் ஒன்றுகூடி  ஒன்றினைந்து திருச்சி முழுக்க போரட்டத்தை வெடிக்க செய்வோம். மாணவர்கள் பேனர்கள் கொண்டுவருமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது. தனி தனியாக போரட்டம் செய்வதை காட்டிலும் அனைத்து கல்லூரி மாணவர்களும் வேறுபாடின்றி கருப்பு சட்டை அணிந்து ஒத்துளைக்குமாறு வேண்டுகிறோம்
 
இடம் : TOLL PLAZA
நேரம்: 09:00Am
Saranathan  college
K.Ramakrishnan  college of engineering & technology
Dhanalakshmi engineering  College
Anna University
M.A.M group of institutions
TRP College of engineering & technology
SRM group of institutions
TRICHY engineering college
M.I.E.T engineering College
Indra ganesan college of engineering
Mahalakshmi engineering College,
CARE school of engineering
Imayam engineering college

J.J engineering college
Govt.arts college
Bishop heber college
Chettinadu college
Chidambaram pillai college
Jamal Mohammed arts & science college
Kurinji college
Periyar E.V.R college
Indra gandhi arts & science college
St.Joseph college
Holly cross institutions
Cauvery college
Srimad aandavan arts & science college

Trichy law college
         
              &
  All students must be join the strike
 we
want #JALLIKATTU
விடுபட்ட கல்லூரிகள் தவறாக எண்ண வேண்டாம் உங்கள் ஈடுபாடு அவசியம்.
செவ்வணக்கம்

மெரினாவில் இளைஞர் சுனாமி


மெரினாவில் மெர்சல் கட்டும் இளைஞர் சுனாமி
மெரினாவில் காலைமுதல் திரண்டிருக்கும் இளைஞர் சுனாமியால் தமிழக அரசு கதிகலங்கி கிடக்கிறது. போலீசார் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மெரினா காமராஜர் சாலை ஒருவழிப்பாதை ஆனது.
கடந்த சனிக்கிழமை அவனியாபுரத்தில் வைக்கப்பட்ட சிறு பொறி பாளமேட்டில் நெருப்பாகி , அடங்கா நல்லூரில் எரிய ஆரம்பித்து இன்று தமிழகம் முழுதும் போராட்ட தீ பெரும் ஜுவாலையாக கொழுந்து விட்டு எரிகிறது.
சென்னை மெரினா , கோவை கொடீஷியா மைதானத்தில் பத்தாயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் இறுதிவரை கலையாமல் உள்ளனர். காமராஜர் சாலையே புதுவருடப்பிறப்பு அன்று இருப்பது போல் புத்தாண்டு கொண்டாட்டம் போல் இளைஞர்களால் சூழப்பட்டுள்ளது.
தங்கள் போராட்டத்தை கைவிடாத இளைஞர்களால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் ஓபிஎஸ் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டம் சூடு பிடிக்க பிடிக்க கலையுலகின் முக்கிய நடிகர்கள் எல்லோரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் அரசு தரப்பில் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு மவுனமாக உள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டு, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் திரண்டு நிற்கிறது. ஒரு பதற்றமான சூழ்நிலை இரண்டு புறமும் நிலவி வருகிறது.
போலீசாராஇ விட இளைஞர்கள் எண்ணிக்கை நேரம் செல்ல செல்ல கூடி நள்ளிரவில் பத்தாயிரக்கணக்கில் உள்ளதால் தடியடியோ , அல்லது கண்ணீர் புகை குண்டு வீசியோ கலைக்க வாய்ப்பில்லை.
பலப்பிரயோகம் செய்தால் அது கடுமையான எதிர் விளைவை உண்டுபண்ண வாய்ப்புள்ளதால் போலீசார் தயக்கத்தில் உள்ளனர்.
போராட்டம் முடிவுக்கு வராவிட்டால் நாளை பள்ளி , கல்லூரிகள் மாணவர்கள் கூடுதலாக குவிய வாய்ப்பு உள்ளது. டைடல் பார்க் இளைஞர்களும் குவிய வாய்ப்பு உள்ளதால் பதற்றம் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.
கடலிலிருந்து சுனாமி கரைக்கு வந்தது போல் திரண்டுள்ள இளைஞர்களின் கூட்டத்தை பார்த்து சென்னை பாசையில் சொல்ல வேண்டுமானால் அரசு மெர்சலாகி போயுள்ளது என்றே கூறலாம்

உணவு கழிவை உரமாக்கும் 'விர்ல்பூல்'

வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போடுபவர்கள், உணவுக் கழிவுகளை உரமாக்க, விர்ல்பூல் ஒரு புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளது. உணவுக் கழிவுகளை, 'ஜெரா புட் ரீசைக்கிளர்' சாதனத்தினுள் போட்டு, அவை மக்குவதற்கு, தேங்காய் நார் மற்றும் சமயல் சோடா துாள்களை போட்டு மூடிவிட்டால் போதும். ஒரு பிளேடு அவற்றை நொறுக்கி, துாள்களாக்கி, வேதி வினை மூலம் உரமாக மாற்றி, வெப்பத்தால் உலர்த்தி, ஒரு வாரத்தில் இயற்கையான உரத் துாள்களாக மாற்றித் தந்துவிடுகிறது. இந்த செயல் முறைகளை யாரும் மேற்பார்வை செய்ய வேண்டியதில்லை. தேவைப்பட்டால், ஜெரா மறு சுழற்சி சாதனத்தை மொபைல் மூலம் தொலைவிலிருந்தே இயக்கவும் முடியும். சி.இ.எஸ்.,சில் விர்பூல் இந்த கருவியை அறிமுகப்படுத்தியது என்றாலும், இதை வாங்கும் ஆர்வமுள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக, 'இன்டிகோகோ' இணையதளத்தில், தள்ளுபடி விலையில் விற்பனையை துவங்க முடிவு செய்துள்ளது, விர்ல்பூல்.

அட்டகாச அட்டைக் கணினி!

கடன் அட்டைகள் நான்கை அடுக்கியது போன்ற தடிமன்; ஸ்மார்ட்போன் மின்கலனைப் போன்ற தோற்றம்; ஆனால் உள்ளே அபார திறன் கொண்ட, 'இன்டெல்'லின், 'கம்ப்யூட் கார்டு' சி.இ.எஸ்.,ல் பலரைக் கவர்ந்தது. நினைவகம், தகவல் அலசும் புராசசர், வை - பை ரேடியோ போன்றவற்றை அடக்கியது. விசைப் பலகையையும், திரையையும் இணைத்தால், இது ஒரு முழு கணினி தான். இதை, சிலிக்கன் சில்லை தயாரிக்கும் நிறுவனம் படைத்திருப்பது, பலரை வாய் பிளக்க வைத்திருக்கிறது. திற மூல கணினி உலகில் பிரபலமான, 'ராஸ்ப்பெர்ரி பை' கணினி புராசசர்களுக்கு போட்டியாக வந்துள்ள, 'இன்டெல்'லின் இந்த படைப்பை, வீடு மற்றும் அலுவலக சாதனங்களுடன் இணைத்து அவற்றை, 'புத்திசாலி' இயந்திரங்களாக மேம்படுத்த முடியும். ஏற்கனவே நுகர்வோர் மின்னணு சாதன தயாரிப்பாளரான, 'ஷார்ப்' இந்த அட்டைக் கணினியை பயன்படுத்த இருக்கிறது. மேலும் பல கணினி மற்றும் மின்னணு சாதன தயாரிப்பாளர்கள், 'இன்டெல்'லின் இந்த குட்டி ஜீனியசை தங்கள் சாதனத்துடன் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கலாம். மேசைக் கணினி, மடிக் கணினி, பலகைக் கணினி ஆகியவற்றுக்கு அடுத்து, அட்டைக் கணினி ரகத்திற்கு இன்டெல் அச்சாரம் போட்டிருக்கிறது!

Saturday, 14 January 2017

தமிழகம்நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் வாழ்த்து அட்டைகளை மறந்த சமூகம்

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி யால் மறந்துபோன பல விஷயங் களில் முக்கிய இடம் வகிப்பவை வாழ்த்து அட்டைகள். அன்பு, நேசத்துடன், நட்பையும், உறவை யும் வளர்த்த வாழ்த்து அட்டைகளை எதிர்நோக்கிக் காத்திருந்த காலம் மலையேறிவிட்டது.
பண்டிகைகளின்போது வாழ்த்து சொல்லும் மரபு பண்டைய காலத் தில் இருந்தே கடைபிடிக்கப் பட்டுள்ளது. எகிப்தில் புத்தாண் டுக் கொண்டாட்டங்களின்போது வாசனைத் திரவியங்களை அன் பளிப்பாகக் கொடுத்துள்ளனர்.
ரோம் நாட்டில் ஆலிவ் இலைகளின் மீது தங்க முலாம் பூசிக் கொடுத்து, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண் டனர். அச்சு இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு, அதை விற்பனை செய்யும் வழக்கம் தோன் றியது. 1850-களில் நவீன வாழ்த்து அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகைகளின்போது வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. 1970 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலத்தை வாழ்த்து அட்டைகளின் பொற்காலம் என்றே கூறலாம்.
பண்டிகைகளின் தொடக்கத் தில் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வரும் வாழ்த்து அட்டை களுக்காக காத்திருந்த காலம் அது. அஞ்சல் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளைப் பெறுவதற் கென்றே தனி பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும்.
இதுகுறித்து தேசிய விருது பெற்ற அஞ்சல் துறை முன்னாள் அதிகாரி நா.ஹரிஹரன் கூறிய தாவது: அஞ்சல் நிலையங்களில் மலைபோல குவியும் வாழ்த்து அட்டைகளைப் பிரித்து, அனுப்பும் பணியில் இரவு பகலாகப் பணியாற்றிய காலம் உண்டு. 1970-ல் 6.74 லட்சம், 1980-ல் 7.76 லட்சம், 1990-ல் 10.24 லட்சம் வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளனன.
ஆனால், அதற்குப் பின் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 2010-ல் 1.50 லட்சம் வாழ்த்து அட்டைகளே அனுப்பப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகள் இந்த எண்ணிக் கையும் வெகுவாகக் குறைந்து விட்டது. அன்பு, நட்பைப் பரி மாறிக்கொள்ளவும், கசப்புகளை மறந்து, உறவைத் தொடரவும் உதவிய வாழ்த்து அட்டைகள் வலம் வந்த காலம் மறக்க முடியாத தாகிவிட்டது என்றார்.
கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள வாழ்த்து, திருமண அட்டைகள் கடையில் பணியாற்றும் பாலுசாமி(40) கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்த்து அட்டைகளை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகி றேன்.
அப்போது 50 பைசா முதல் ரூ.200 வரையிலான விலைகளில், பல்வேறு அளவுகள், டிசைன்களில் வாழ்த்து அட்டைகள் விற்பனை யாகும். ஆனால், அதில் 10 சதவீதம் கூட தற்போது விற்பனையாவ தில்லை” என்றார்.
வாழ்த்து அட்டைகளை அனுப்பு வது வெகுவாகக் குறைந்துவிட் டாலும், வாழ்த்துகளை அனுப்பு வது குறையவில்லை. குறுந்தக வல்களாக செல்போனில் வாழ்த்து கள் அனுப்பப்பட்டன. தற்போது, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றவற்றில் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பத்தின் உதவி யுடன் பல டிசைன்களில் வாழ்த் துகள் உருவாக்கப்பட்டு, கம்ப்யூட் டர்கள் மற்றும் செல்போன்கள் மூலம் எண்ணற்ற நண்பர்கள், உறவினர்களுக்கு ஒரே நேரத்தில், நொடிப்பொழுதில் வாழ்த்துகள் அனுப்பப்படுகின்றன.
என்னதான் நவீன வடிவங்களில் வாழ்த்துகளை அனுப்பினாலும், வாழ்த்து அட்டைகளை வாங்கி, அதில் கைப்பட எழுதி, உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி நட்பையும், அன்பையும் பரிமாறிக்கொண்ட உணர்வை எதுவும் தராது. எல்லாமே அவசரமான தற்போதைய சூழலில், வாழ்த்துகளை அனுப்புவதும் வெறும் சம்பிரதாயமாகி விட்டது.