வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போடுபவர்கள், உணவுக் கழிவுகளை உரமாக்க, விர்ல்பூல் ஒரு புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளது. உணவுக் கழிவுகளை, 'ஜெரா புட் ரீசைக்கிளர்' சாதனத்தினுள் போட்டு, அவை மக்குவதற்கு, தேங்காய் நார் மற்றும் சமயல் சோடா துாள்களை போட்டு மூடிவிட்டால் போதும். ஒரு பிளேடு அவற்றை நொறுக்கி, துாள்களாக்கி, வேதி வினை மூலம் உரமாக மாற்றி, வெப்பத்தால் உலர்த்தி, ஒரு வாரத்தில் இயற்கையான உரத் துாள்களாக மாற்றித் தந்துவிடுகிறது. இந்த செயல் முறைகளை யாரும் மேற்பார்வை செய்ய வேண்டியதில்லை. தேவைப்பட்டால், ஜெரா மறு சுழற்சி சாதனத்தை மொபைல் மூலம் தொலைவிலிருந்தே இயக்கவும் முடியும். சி.இ.எஸ்.,சில் விர்பூல் இந்த கருவியை அறிமுகப்படுத்தியது என்றாலும், இதை வாங்கும் ஆர்வமுள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக, 'இன்டிகோகோ' இணையதளத்தில், தள்ளுபடி விலையில் விற்பனையை துவங்க முடிவு செய்துள்ளது, விர்ல்பூல்.
No comments:
Post a Comment