இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
கேப்டன் பதவியை தோனி துறந்ததையடுத்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக விராட் கோலி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 அணியில் மீண்டும் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தோனி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாகத் தொடர்கிறார்.
மேலும் ஒருநாள் அணியில் அஸ்வின், ஜடேஜா மீண்டும் இடம்பெற்றுள்ளனர். ஒருநாள் அணியில் ரெய்னா இல்லையெனினும் டி20 அணியில் ரெய்னா, யுவராஜ் இருவரும் உள்ளனர். ஒருநாள் அணியில் ஷிகர் தவண் இடம்பெற்றுள்ளார்.
அதிரடி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் ரிஷப் பண்ட் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், இவர் ரஞ்சியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்பதோடு அதிவேக சதம் எடுத்து ரஞ்சி சாதனை நிகழ்த்தியவர், 48 பந்துகளில் இவர் சதம் எடுத்து தமிழக வீரர் வி.பி.சந்திரசேகர் சாதனையை உடைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் டி20 அணியில் ஆச்சரிய தேர்வு ஆஷிஷ் நெஹ்ரா. டி20 பேட்டிங்கில் மந்தீப் சிங் ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் டி20 அணியில் யஜுவேந்திர சாஹல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ஒரு நாள் அணி வருமாறு:
கே.எல்.ராகுல், ஷிகர் தவண், விராட் கோலி (கேப்டன்), தோனி, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், யுவ்ராஜ் சிங், அஜிங்கிய ரஹானே, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ்
டி20 அணி:
விராட் கோலி (கேப்டன்), ராகுல், மந்தீப் சிங், தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, யஜுவேந்திர சாஹல், மணீஷ் பாண்டே, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ் குமார், ஆஷிஷ் நெஹ்ரா

No comments:
Post a Comment