Monday, 9 January 2017

தமிழகத்திற்கு கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறப்பு

சென்னை: தமிழகத்திற்கு கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கடிதம்
'சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
4 நாட்களில் வந்தடையும்
இதையடுத்து, கண்டேலேறு அணையிலிருந்து இன்று விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கண்டேலறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 4 நாட்களில் தமிழக எல்லையை வந்தடையும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment